வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது – துரைமுருகன்

எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என்றும் யார் தலைவர் என்பதே குழப்பமாக உள்ளதால் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என தெரியவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நான்கு ஆண்டு பிறகு சசிகலாவின் வருகை அதிமுகவில் என்ன நடக்கப்போவது என்று தெரியவில்லை. ஒருபக்கம் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் சசிகலா குறித்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை, மவுனமாக இருந்து வருகிறார்.
இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக திட்டமிட்ட சசிகலா, ஓபிஎஸ்சிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது. இதனால், ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் மெரினாவில் தியானம் செய்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025