வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை- மு.க.ஸ்டாலின்
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசும் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது!
அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்! #OnionPrice— M.K.Stalin (@mkstalin) November 27, 2019
வெங்காய விலை ஏற்றம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.