திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது – முதலமைச்சர் குற்றச்சாட்டு

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரம் ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் குற்றசாட்டு. 

நாகர்கோவிலில் கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாதி கலவரம், மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவி கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம். திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரம் ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர். பிரச்சனைகளை தூக்கி வைத்து விட்டு கவுரவம் பார்க்காமல் திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கலைஞர் சிலையை திறந்தால் மட்டும் போதாது அவரின் லட்சியத்தை நிறைவேற்ற போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்ன ஆவது என சிலர் நினைக்கின்றனர். தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சிலர் திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர்.  தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால்தான் பாஜக ஆட்சியை அகற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago