இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக, 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்தும் இருந்தது.
இந்த சூழலில், இன்று (டிசம்பர் 20 ) காலை 10 மணி வரை லேசான இடியுடன் கூடிய மழை 6 மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் சாலைகள் வழுக்கும் நிலைகளில் உள்ளது இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பதால் பாதுகாப்பாக இருக்கவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.