#Breaking : தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.! அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள்… 

Default Image

இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.  

இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிய அமைச்சராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.

அதே போல தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தற்போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பிற்படுத்தப்பட்ட அமைச்சராக பொறுப்பில் உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக காதி துறை ஓதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக ராமச்சந்திறன் தற்போது சுற்றுலாத்துறைக்கும்,
சுற்றுலா துறை அமைச்சராக இருந்த அமைச்சர் மதிவேந்தன்,  வனத்துறைக்கும் மாற்றம் பெற்றனர்.

புள்ளியில் துறையானது அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இருந்து தற்போது நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த  சிஎம்டிஏ துறை (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) தற்போது அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியிடம் துணி நூல் துறை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. காதி துறை அமைச்சர் ராஜா கண்ணப்பனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியில் இருந்த அமைச்சர் மெய்யானதனுக்கு தற்போது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை மற்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை , நான் முதல்வன் திட்டம் , வறுமை ஒழிப்பு திட்டம் ஆகிய பொறுப்புகள் கூடுதலாக புதிய அமைச்சர் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்