இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டு இருக்காங்க..! ஒன்னு மோடி.. இன்னொன்னு அமித்ஷா..! – ராதாரவி
இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா என ராதாரவி பேச்சு.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், அண்ணாமலை பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவோ திமுகவோ என்னும் நிலை வரும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் பாஜகவை வென்று மத்தியில் ஆட்சி செய்யும். மகாராஷ்டிராவில் நடந்தது போல தமிழகத்திலும் ஆட்சிக் கவிழும் என தெரிவித்துள்ளார்.
அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் பேச்சுக்கலை நான் கேட்டேன் ஆனால் இந்த அண்ணாமலையை போல சொந்த பேச்சுத் திறமை கொண்டவரை நான் பார்த்ததில்லை. கருணாநிதி குடும்பத்திலிருந்து முதல்வராக ஸ்டாலின் வந்துள்ளது எனக்கு சந்தோசம் தான். மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோமே பார்த்தீர்களா? ஆனால் நம்ம கட்சியை சேர்ந்த பட்நாவிஸ் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டது குறிக்கிறது.
இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா. ஒன்றிய அரசு 10 ஆயிரம் தடவை சொன்னாலும் சரி, பத்தாயிரம் தடவை திராவிட மாடல் என்ன சொன்னாலும் சரி அவங்க ரெண்டு பேரும் கண்டுக்கவே மாட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.