இபிஎஸ் அணியினர் பற்றி ஆயிரம் இருக்கு.. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்.! ஓபிஎஸ் பேட்டி.!

Published by
மணிகண்டன்

இபிஎஸ் அணியினர் பற்றி ஆயிரம் இருக்கு.. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி விதிகளுக்கு உட்பட்டு அமைதியாக இருக்கிறேன். என ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேற்று முதல் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றார்.

opscandidateadmk

செய்தியாளர்கள் சந்திப்பு : இந்நிலையில், அந்த தீர்ப்பு குறித்தும், தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் .

அதிகாரம் இல்லை : அப்போது கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இதனை அடுத்து மக்களிடம் நீதி கேட்போம், மக்கள் மன்றத்தை நாடுவோம் என குறிப்பிட்ட ஓபிஎஸ், ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த தீர்ப்பை வைத்து கொண்டு தேர்தல் ஆணையம் செல்ல முடியாது.  என குறிப்பிட்டார் இபிஎஸ்.

எழுச்சியோடு இருக்கிறோம் : அடுத்து, பழனிசாமி தாத்தா மாடசாமி ஆரம்பித்த கட்சி இல்லை. இது தொண்டர்களால் உருவாக்கபட்ட கட்சி. தீர்ப்புக்கு பின்னர் தான் நாங்கள் எழுச்சியோடு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் பி டீம், A முதல் Z டீம் என குறிப்பிட்டார் ஓபிஎஸ்.

ரகசியம் வெளியே வரும் : அவர்கள் பேசினால் நானும் பேசுவேன். ஆயிரம் இருக்கு இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி விதிகளுக்கு உட்பட்டு அமைதியாக இருக்கிறேன். என குறிப்பிட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் என்பக்கம் இருக்கிறார்கள். என பேசினார்.

சசிகலா சந்திப்பு : அடுத்து, அவர்கள் யார் எங்களை சேர்க்க மாட்டேன் என்று சொல்வது.? நாங்கள் மக்கள் மன்றத்தில்  நீதி கேட்போம். சசிகலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு அதற்கான சூழ்நிலை அமையவில்லை.  கூடிய விரைவில் சந்திப்பு நடக்கும். என பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

12 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

34 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

1 hour ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

1 hour ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago