இபிஎஸ் அணியினர் பற்றி ஆயிரம் இருக்கு.. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்.! ஓபிஎஸ் பேட்டி.!
இபிஎஸ் அணியினர் பற்றி ஆயிரம் இருக்கு.. இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி விதிகளுக்கு உட்பட்டு அமைதியாக இருக்கிறேன். என ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேற்று முதல் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பு : இந்நிலையில், அந்த தீர்ப்பு குறித்தும், தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் .
அதிகாரம் இல்லை : அப்போது கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இதனை அடுத்து மக்களிடம் நீதி கேட்போம், மக்கள் மன்றத்தை நாடுவோம் என குறிப்பிட்ட ஓபிஎஸ், ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த தீர்ப்பை வைத்து கொண்டு தேர்தல் ஆணையம் செல்ல முடியாது. என குறிப்பிட்டார் இபிஎஸ்.
எழுச்சியோடு இருக்கிறோம் : அடுத்து, பழனிசாமி தாத்தா மாடசாமி ஆரம்பித்த கட்சி இல்லை. இது தொண்டர்களால் உருவாக்கபட்ட கட்சி. தீர்ப்புக்கு பின்னர் தான் நாங்கள் எழுச்சியோடு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் பி டீம், A முதல் Z டீம் என குறிப்பிட்டார் ஓபிஎஸ்.
ரகசியம் வெளியே வரும் : அவர்கள் பேசினால் நானும் பேசுவேன். ஆயிரம் இருக்கு இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி விதிகளுக்கு உட்பட்டு அமைதியாக இருக்கிறேன். என குறிப்பிட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் என்பக்கம் இருக்கிறார்கள். என பேசினார்.
சசிகலா சந்திப்பு : அடுத்து, அவர்கள் யார் எங்களை சேர்க்க மாட்டேன் என்று சொல்வது.? நாங்கள் மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். சசிகலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு அதற்கான சூழ்நிலை அமையவில்லை. கூடிய விரைவில் சந்திப்பு நடக்கும். என பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.