இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த ஹாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
தாயகம் திரும்பிய 212 இந்தியர்களில் 14 தமிழர்கள் சென்னை வருகை புரிந்த நிலையில், அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாலத்தீன பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை, தமிழகம் வந்துள்ள இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் நேரடியாக கோவை சென்றனர். இன்னும் 114 தமிழர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…