தமிழக அமைச்சரவையில் முக்கிய 3 மாற்றங்கள்.! துணை முதல்வர் பதவி அறிவிக்கப்படுமா.?
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று காலை முதல் ஓர் முக்கிய செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு 17 நாள் பயணமாக செல்ல உள்ளார். அதற்கிடையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அதன் அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், மிக முக்கியமாக ஒரு மூத்த அமைச்சர் மற்றும் 2 முக்கிய அமைச்சர்களின் துறைகள், 3 புதுமுகங்களுக்கு அந்தந்த துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்ததாக, திமுகவினர்களே வெகு நாட்களாக கூறி வரும் “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என்ற கோரிக்கையை, தலைமை இன்று நிறைவேற்றுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். ஆகஸ்ட் 28ஆம் தேதி சான் பிராசிஸ்க்கோ செல்லும் முதல்வர், அங்கு தொழிலாளர் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்கிறார். பின்னர் செப்டம்பர் 2ஆம் தேதி முதலமைச்சர் சிகாகோ செல்கிறார்.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்க வாழ் அயலக தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அதன் பின்னர், 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தாயகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.