பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?
AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது.
தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
Read More – அடக்கி வாசிங்க குஷ்பூ.. ‘பிச்சை’ சர்ச்சைக்கு பரபரப்பு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் அமைச்சர்.!
பாஜக தலைமையில் ஏற்கனவே தமாக கூட்டணியில் உள்ளது. சமக தலைவர் சரத்குமார் தன் கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார். அடுத்து நேற்று இரவு தனியார் ஹோட்டல் விடுதியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜக பொறுப்பாளர்கள் உடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் பாஜக உடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி என்ற முடிவை உறுதி செய்தனர்.
Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…
இந்த கூட்டணி குறித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நிறைய கட்சிகள் பாஜக தலைமையில் இணைந்து மெகா கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அதற்கடுத்து பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், குறிப்பிட்ட சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் யாரும் நிர்பந்திக்கவில்லை. ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளதால் மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விரும்பியுள்ளனர் என்று கூறினார். அவரும் பாஜகவுடன் தலைமையிலான கூட்டணி உறுதிப்படுத்தினார்.
Read More – பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!
இந்நிலையில், பாஜக தலைமையில் கூட்டணியில் அமமுக கட்சிக்கு நான்கு தொகுதிகளும், ஓபிஎஸ் பிரிவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அடுத்தடுத்த கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி முடிவுகளில் தெளிவாக தெரிய வரும்.