திமுக அணியை எதிர்த்து போட்டியிடக்கூடிய அணிகள் இல்லை- திருமாவளவன்..!

Thirumavalavan

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர்  விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது” விசிக வின் வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி பெறுவதற்கு அரும்பாடு பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 100% ஒப்புகை சீட்டு தரக்கூடிய வசதியுடன் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒப்புகை சீட்டையும் ஒப்பீடு செய்து வெற்றி தோல்வியை அறிவிக்க வேண்டும்.

விரைவில் விசிக தொகுதி பங்கீடு குறித்து திமுக உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளோம். 2019-ஆம் ஆண்டு முதல் திமுக கட்டுக்கோப்பாக வலிமையாக இருந்து வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நல்மதிப்பை  பெற்றுள்ளது. எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.  இந்த தேர்தலில் திமுக அணியை எதிர்த்து போட்டியிடக்கூடிய சக்தி மிக்க அணிகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை களத்தில் காட்டுவோம் -முதல்வர் ஸ்டாலின்

மக்களுடைய வாழ்த்த்துகளுடன் மீண்டும் திமுக கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றியை பெரும், நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுத்தொகுதியை  கேட்க உள்ளோம். திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டு கொள்வோம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்திதியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்னவென்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம்.  யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், மக்களுக்கு தொண்டாற்றலாம் , மக்களுக்கு பணியாற்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை, அதுதான் ஜனநாயகம் என தெரிவித்தார். மேலும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்