தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பு மெதுமெதுவாக குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால், இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.