சென்னையில் 5 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை…!

சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. அதன்படி, ராஜீவகாந்தி, ஸ்டான்லி , கீழ்பாக்கம், ஓமந்தூரார் கிண்டி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை.