நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்- தமிழிசை
நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடையே எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்கள்.நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீட் தேர்வு தோல்வியால் மேற்கொள்ளப்படும் தற்கொலைகளை ஊக்குவிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.