எதிர்க்கட்சிகளுக்கும், நம்மிடம் இருந்து சென்ற துரோகிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
அதிமுக அரசை வீழ்த்தி விடலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக அரசை வீழ்த்தி விடலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது . திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்.எதிர்க்கட்சிகளுக்கும், நம்மிடம் இருந்து சென்ற துரோகிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.