தமிழகத்தில் மொத்தம் 3,724 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது – தமிழக அரசு!

தமிழகத்தில் மொத்தம் 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட வாரியாக பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்த பட்டியலை ஆய்வு செய்து வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 3724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகளவில் தஞ்சாவூரில் தான் 221 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேனியில் அதிகபட்சமாக 200, நீலகிரியில் 144, தூத்துக்குடியில் 142, திருவாரூர் மற்றும் தென்காசியில் 117 என மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல்,
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025