தென்பெண்ணையில் கர்நாடகா அணை கட்ட தடையில்லை ! தமிழக அரசின் மனு தள்ளுபடி

தென்பெண்ணையில் கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது.கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தமிழக அரசின் வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தது.மேலும் கர்நாடக அரசு அணைக்கட்டவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு.