தேனி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து.!
தேனி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், கோரோனோ பரவலை தடுக்க தமிழகஅரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது, இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவமனை கொரோனா வார்டில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் ரசாயணங்கள் தீ பிடித்து எரிந்ததால் மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது, தீ விபத்து ஏற்பட்டது குறித்து தீயணைப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புகை மூட்டத்தால் நோயாளிகள் மூச்சுவிட சிரமம் அடைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தவிர்த்து பிற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அங்குள்ள உள்ள மரங்களின் அடியில் அமர்த்தப்பட்டனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்தும் மேலாக போராடி தீயை அணைத்தனர் மேலும் தனியார் ஏஜென்சி மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அந்த வைப்பறையில் இருந்த 90 சதவீதம் பொருள்கள் எரிந்தன நாசமாகியது.