தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு.! ஒரே ஒரு நாள் மட்டும்.!
தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சில விதிமுறைகள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதனால், அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.