தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட ஆம்புலன்ஸ் குழுவில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினருடன், மலைவாழ் கிராம மக்களும் பொதுமக்களும் அதிக ஒத்துழைப்பு அளித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 3 பேருக்கு மட்டுமே 50 சதவீதத்துக்கும் குறைவான தீக்காயம் உள்ளது. ஆனால் 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் 74 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தொடர் சிகிச்சை அளித்து, காயமடைந்தவர்களை விரைவாகக் குணப்படுத்த 33 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க மலைப் பகுதிக்கு ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநரும் தொழில்நுட்ப நிபுணரும் மிகத் திறமையாகப் பணியாற்றினர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீஷின் பணி பாராட்டுக்குரியது. ஆம்புலன்ஸ் எந்த அளவுக்குச் செல்லுமோ அதையும் தாண்டி ஆம்புலன்ஸை இயக்கி, காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு வர உதவியதோடு, அங்கிருக்கும் நிலவரத்தை படம் பிடித்து மீட்புக் குழுவினருக்கும் அனுப்பினார். சம்பவப் பகுதியில் இருந்து காட்சிகளை அனுப்பியதால்தான் மீட்புக் குழுவினரும் விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது. வெறும் பணியாக நினைக்காமல் மீட்புப் பணி நிறைவு பெறும் வரை முழு ஒத்துழைப்புக் கொடுத்த இரண்டு இளைஞர்களுக்கும் இந்த சமயத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதாவது, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது காயங்கள் மூலமாக நோய்த் தொற்று இல்லாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே சமயம், அவர்களது உடலில் திரவச் சத்து குறையாமல் இருக்கும் வகையிலும் உடனுக்குடன் திரவச் சத்து ஏற்றப்படுகிறது.
தேவைப்பட்டால் ஓட்டுத் தோல் பொருத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படும். காயமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…