8 பேர் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், இருபிரிவுகளாக குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து கொழுக்கு மலைக்குச் சென்றனர்.
சனிக்கிழமை இரவு குரங்கணியில் தனியார் ரிசார்டுகளில் தங்கி ஓய்வெடுத்த அவர்கள், ட்ரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்காக, கொழுக்கு மலைக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது, காற்றின் வேகத்தால், தீ பரவியதை அறியாது, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 36 பேரும், காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.
இதையறிந்த விரைந்த வனத்துறையினர், மலைக்கிராம மக்கள், காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட போதும், இதுவரை 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர் பாக்யராஜ் என்பவர், காட்டுத்தீயில் சிக்கி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…