தேனி அருகே காட்டுத் தீயில் சிக்கிய 15 பேர் காயங்களுடன் மீட்பு!
கமாண்டோ வீரர்கள், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக, வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி என்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கொழுக்கு மலைப்பகுதி இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும்.
போடியில் இருந்து குரங்கணிக்கு வாகனங்களில் சென்று, பின்னர் டாப் ஸ்டேசனுக்கு மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாக 36 பேர் சென்றிருந்தனர்.
இதுதவிர வேறு சிலரும் உள்ளே சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக, ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் குரங்கணிக்கு விரைந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறும் என்றும், விடிந்ததும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.