செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவில் உருவாக்கப்பட்ட கட்சியை கவிழ்ப்பதற்கு, அன்றைக்கு எட்டப்பன் இருந்தார். இன்றைக்கு செந்தில் பாலாஜி இருக்கிறார். அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறார். அவரது கனவு ஒருபோதும் நினவாகாது என்று தெரிவித்துள்ளார்.
என்றைக்கும் தர்மம், நீதி, உண்மை இதுதான் வென்ற சரித்திரம் உண்டு, அதர்மம் என்ற சரித்திரம் கிடையாது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி என்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பல பொய்கள் சொன்னவர் எனவும் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார். அடுத்து எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர் ஐஎஸ்ஐ முத்திரை, அவர் போலி என்றும் கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…