‘பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது’ ! முதல்வர் சந்திப்பிற்கு பின் திருமாவளவன் பேச்சு.

VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்ததை பற்றி பேசினார்.

அவர் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைந்துள்ளது. அரசின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். நீட் தேர்வு ரத்து குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், சாதியவாதிகளையும் மதவாதிகளையம் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஆலோசித்தோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தீவிரப்படுத்தவும் அரசியல் தலைவருக்குப் பாதுகாப்பு உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளோம். மேலும், கூலிப்படை கும்பலையும், அவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்கும் நபர்களையும் விசாரிக்க வேண்டும்.இந்த கொலையில் ஆருத்திரா கோல்டு நிருவனத்திற்கும் பாஜகவை சார்ந்த சிலருக்கும் இடையுள்ள உறவு குறித்து கடந்த ஒரு ஆண்டாக பேசப்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். இப்பொது அம்ஸ்டரிங் கொலையில், ஆருத்ரா கோல்ட் விவகாரமும் பேசப்பட்டு வருகிறது. இதில், பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ-யை விசாரணை கோருகிறது. இது போன்ற விவகாரத்தை புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டிய ஒன்றாக உள்ளன.

அவர்களது அரசியல் செயல்திட்டம் என்பது திமுகவிற்கு எதிராக ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் வாய்ப்புகளை பயன்படுத்தி சட்ட ஒழுங்கை சீர்கெடுக்க வேண்டும் எனவும் இருக்கிறது. அதற்கு துணையாக இங்கே பல அமைப்புகளும் செயல்பட்டு வருவதை காண முடிகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிப்பது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக இருக்கிறது.

கருத்தியல் விமர்சனங்களை வைக்கலாம், அரசியல் விமர்சனங்களை வைக்கலாம், ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆகவே, ஒட்டு மொத்தமாகவே அரசியல் செயல் திட்டங்களை வரையறைத்து கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் செய்லபட்டு வருவதை அறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியிறுத்திருக்கிறோம்.

அடைக்கலம் தரக்கூடிய அமைப்பினர் அல்லது கட்சியினர் மீதும் உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். மேழும், நீட் தேர்வு விவகாரத்தில் கிரிமினல் சட்டங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மனு ஒன்றை அளித்துள்ளோம். அதற்காக அனைத்து கட்சிகளை கூட்ட வேண்டும், இன்று இந்தியா அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது நீட் தேர்வு. தமிழகத்தில் ஒலித்த இந்த குரல் இன்று நாடளுமன்றத்தில் ராகுல் காந்தி போன்ற தலைவர்களும் வலுவாக பேசக்கூடிய ஒரு அளவிற்கு மாறி இருக்கிறது.

இதில் ஊழல் முறை கேடுகள் நடைபெற்றுள்ளது, அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே அதை மூடி மறைப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது. வினாத்தாள் கசிந்தது வெளியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது உச்சநீதி மன்ற தளபதியே விசாரணையின் போது அதை உறுதி செய்துள்ள நிலையில் இது சம்மந்தமாக திமுக அரசு தலையிட வேண்டும்”, என்று பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்