வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் திருட்டு ! காவல்த்துறையினர் விசாரணை

வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து செல்லப்பட்டது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஓன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பள்ளியை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர்.
அன்று நள்ளிரவு பள்ளிக்குள் புகுந்த திருடன் அங்குள்ள பீரோவில் இருந்த ரூ.52000 பணம் மற்றும் 1 லேப்-டாப், கம்ப்யூட்டருக்கான சாதனங்கள உள்பட ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டான்.இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர் காவல்த்துறையினர் புகார் அளித்து வருகின்றனர்.பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025