விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த எட்டாம் தேதி ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து ஐபிஎல் ,ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருந்தது. 15ஆம் தேதி மீண்டும் இந்த கூட்டம் நடக்க இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் மேலும் சில கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள், விரைவில் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் திரையரங்குகளை உடனடியாக திறந்தால் தான் அதை நம்பி உள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…