தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜு!

Published by
Rebekal

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத் துறைகள் என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு சில தளர்வுகளையும், போக்குவரத்துக்கு முழுமையான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் அரசு தளர்வுகள் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது, தமிழகத்தில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனவும், எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஓடிடி படம் வெளியிடுவது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…

3 mins ago

அமரன் வெற்றி! தனுஷுக்கு ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…

9 mins ago

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…

15 mins ago

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

28 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

32 mins ago

தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…

33 mins ago