தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பும் குறைந்து கொண்டே வரும் நிலையில், மேலும் பல தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது பண்டிகை காலம் என்பதால், திரையரங்குகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதுகுறித்தும், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகளும் திறக்க ஆலோசனை மேற்கொள்ளவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மாலை 3.30 மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…