சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தானது – செல்வப்பெருந்தகை.!
சென்னை : மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்கு பெறவில்லையெனில், வேட்பாளர் டெபாசிட் செய்த வைப்புத் தொகையை இழக்க வேண்டியிருக்கும். அதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துவிட்டது. இருந்தாலும், அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘நாம் தமிழர் கட்சி அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது’ என்று கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், “இந்த நாட்டில் எது ஆபத்தான விஷயம் என்றால் ஏமாந்துபோன இளைஞர்களெல்லாம் நாம் தமிழருக்கு வாக்களிப்பது தான். சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது.
ஏமாந்துபோன இளைஞர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். சீமானைப் போன்ற பிரிவினை பேசுவோருக்கு இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தானது” என கூறிஉள்ளார்.