நாட்டில் நடந்த இழிவுநிலை பற்றி இளைய சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Default Image

தோள்சீலை 200ஆம் ஆண்டு விழாவை நடத்துவது மூலம் நம் நாட்டில் எந்த மாதிரியான இழிநிலை இருந்தது என்பதையும் அதனை வீரமிகு போராட்டத்தால் எப்படி அடித்து நொறுக்கப்பட்டது என்பதையையும் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

பெண்கள் தோள் சீலை அணிய கூடாது என, அதாவது, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த பெண்களை தவிர மற்ற யாரும் மார்பை மறைக்கும் படியான உடைகளை அணிய கூடாது என 1800 காலகட்டத்தில் ஓர் இழிநிலை நிலவியது. அதனை எதிர்த்து பெண்கள்  உரிமைக்காக 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் தோள்சீலைப் போராட்டம் நடைபெற்றது.  முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் மூலமாகவே பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமை கிடைத்தது.

இந்த வீரமிகு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நாகர்கோவிலில் விழா நடைபெற்றது. இந்த தோள்சீலை போராட்ட்டம்  200ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் , காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகி இருக்கக்கூடியது தோள்சீலை போராட்டம். அதன் 200-வது ஆண்டு நிறைவு விழாவில் நான் பங்கெடுப்பதிலே மிகுந்த பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.

மேலும், இந்த விழாவை நடத்துவது மூலம் இந்த நாட்டில் எந்த மாதிரியான இழிநிலை இருந்தது என்பதையும் அந்த இழிநிலையானது வீரமிகு போராட்டத்தால் எப்படி அடித்து நொறுக்கப்பட்டது என்பதையையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உனர்த்துவதற்காகவே தோள்சீலை 200ஆம் ஆண்டு நிறைவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும்,  நடத்தப்பட வேண்டும். எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்