அண்ணனை கொலை செய்ததற்காக பழி தீர்த்த தம்பி ..! ஒரு மணி நேரத்திற்குள் கைது !

வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த பிரபல ரவுடி எம். எல். ஏ ராஜா என்பவர் கடந்த ஜூலை-2 ம் தேதி வீட்டை விட்டு பைக்கில் வேறொரு இடத்திற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து பொதுமக்கள் பலர் முன்னிலையில் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால், முகத்தில் 20 வெட்டுக்களுடன் உயிருக்குப் போராடிய ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கர்நாடக எண் கொண்ட காரை வல்லம் சுங்கச்சாவடி அருகே கொலையாளிகளை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் முதற்கட்ட விசாரணையில் தேஜாஸ் என்பவரின் அண்ணனை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜா கொலை செய்ததாகவும் அதற்குப் பழி தீர்க்கவே அந்தக் கும்பல் ராஜாவைக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், கொலை செய்த கும்பலை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த கோர சம்பவம் அரியூர் அருகே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.