வெள்ளத்தில் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய இளைஞன்..! 3 நாள் கழித்து சடலமாக மீட்பு..!

death

மிக்ஜாம் புயல் (Michaung cyclone)  மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னியில் பெரும்பாலான பகுதிகளில் தங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள், மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்!

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை சீராகுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.  சென்னை பள்ளிகரணையில் இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிய தனது தாய், தந்தை, சகோதரியை மீட்ட நிலையில்,  அவர் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து மீட்புக்குழு அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 3 நாட்கள் கழித்து உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இளைஞனின் உடலை பார்த்து, குடும்பத்தினர் கதறி அழுத்த காட்சி பார்ப்போரை துயரத்தில் ஆழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்