புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தருக்கு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.
சிறை தண்டணையுடன் ரூ.5000 அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார். இதனையடுத்து உடனடியாக சுரேந்தர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…