காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்…அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

Default Image

காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மறுநாள் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.பணி முடிந்த பின் இரவு நேரங்களில்,தான் பணிபரியும் நூற்பாலை அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அருகே சென்று காதலியுடன் செல்போனில் பேசி வந்தார்.

இந்த நிலையில்,வெளிச்சம் மற்றும் சுற்றுசுவர் இல்லாத கிணற்றுப்பகுதி அருகே காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிக், எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.இதனால்,அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தன்னை காப்பாற்றுமாறு அவர் சத்தம் போட்டுள்ளார்.

ஆனால்,அவர் எழுப்பிய சத்தம் யாருக்கும் கேட்காததால்,சுமார் 10 மணி நேரமாக கிணற்றுக்குள் இருந்துள்ளார்.அதன்பின்னர்,விடிந்த பிறகே அவர் கிணற்றுக்குள் தத்தளிக்கும் தகவல் கிடைத்து,தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து,கயிறு கட்டி கிணற்றுக்குள் இருந்த ஆசிக்கை தீயணைப்பு துறையினர் மீட்டு,சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Srivaikundam Staion Master Jawber Ali - Dec 2023 Sendur Express Train
mor kali (1)
blood increase (1)
TN Deputy CM Udhayanidhi - World Carrom Champion M Khazima - (L-R) K Nagajothi -V Mithra - A Maria Irudayam - M Khazima
PM Modi
MK Stalin - Amithsha