மதுபோதையில் சாலையில் சென்றவர்களை வெட்டிய வாலிபர்..!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள வண்டிமேட்டுகொள்ளை என்ற கிராமத்தில் ஹரி என்ற இளைஞர் மதுபோதையில் சாலையில் வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.மேலும் ஹரி மறைத்து வைத்துஇருந்த கத்தியால் 5 பேரை வெட்டியுள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களுக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இவர்களை வெட்டிய ஹரியை கைது செய்ய கோரி அங்கு உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார் ஹரியை கைது செய்வதாக கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.போதையில் 5 பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.