குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது போனில் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினார், உடனடியாக பதற்றமடைந்த அவரது நண்பர்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்,உடனடியாக சதீஸ்குமாரை பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும்அவரை தேடினர் ஆனால் சதீஸ்குமாரை ஒரு நாள் முழுவதும் காணவில்லை.
இந்த நிலையில் அடுத்த நாள் சதீஸ்குமார் மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் தூக்கிட்டு சடலமாகக் சதீஸ்குமார் கிடந்தார், சதீஸ்குமார் உடலை அவரது பெற்றோர்கள் உருமநாதபுரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கை முடித்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…