தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கணவன் சக்திவேல், மனைவி வசந்தா இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு மகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள தாய் வசந்தா வீட்டுக்கு சென்றுவிட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட அந்த பெண்ணை அருகில் இருந்தவர் மீட்டு, காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறினார்.
இதுகுறித்து குலசேகரம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? அந்த நபர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…