போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வன்முறையின் காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறிவிடாது – ஜோதிமணி எம்.பி
வேளாண் சட்டம் ரத்து குறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஜோதிமணி எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுளளார். அந்த பதிவில், ‘விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு பணிந்து மோடி அரசு விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன். இப்பொழுது போராடிய விவசாயிகளை தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்று பொய்களை விதைத்தற்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்கள்மீது வன்முறையை ஏவிவிட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மரணத்திற்கு காரணமாக இருப்பவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு இருந்தாலும் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வன்முறையின் காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறிவிடாது.’ என பதிவிட்டுள்ளார்.
விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு இருந்தாலும் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வன்முறையின் காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறிவிடாது.
(3/3)— Jothimani (@jothims) November 19, 2021