சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது -நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 73 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இது குறித்து கூறுகையில்,ரிக் இயந்திரம் மூலம் குழித்தோண்டி முடித்தாலும் பக்காவட்டு பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது. கைகளால் துளையிடவுள்ளதால் சற்று கடினமாகவே இருக்கும்.
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது.தற்போது 50 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது, மீட்பு பணியில் பாறைகள் கடும் சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.