குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த இயலாது : அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தங்களது குழந்தை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த இயலாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற புள்ளி விபரம் கிடைத்திருப்பதாகக் கூறினார்.