இனி பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை -தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
கொரோனா வைரஸ் இந்தியாவில் 110 பேரை தாக்கி உள்ளது.மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து ரயில் பெட்டிகளிலும் , பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் கம்பளி போர்வைகள் கேட்டால் மட்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளது. ரயில்வே வாரிய அறிவுறுத்தல்படி ஏசி பெட்டிகளில் கம்பளி போர்வை வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.
பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்து பயணிகளுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.