அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதி!!மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும்
அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதியை மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதியை மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும்.இதன் பின் அனுமதியில்லாமல் பெண்கள் விடுதி செயல்படக்கூடாது .அதேபோல் விதிகளை பின்பற்றும் பெண்கள் விடுதிகளுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.