ஈசா யோகா மையத்திற்கு சென்று விட்டு திரும்பிய சுபஸ்ரீ என்ற பெண் சடலமாக மீட்பு.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் கடந்த மாதம் 11-ம் தேதி கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். அவர் ஒரு வார காலம் பயிற்சி முடிந்தபின் கடந்த 18-ஆம் தேதி அவரை அழைப்பதற்காக சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமார் யோக மையத்திற்கு வந்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தினால் அவரது மனைவி குறித்து யோக மைய நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அப்போது ஈசா யோக மையம் தரப்பில் பயிற்சி முடிந்து காலையிலேயே சுபஸ்ரீ வெளியே சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை வரை காத்திருந்தும் சுபஸ்ரீ வராத காரணத்தால் பழனிக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பயிற்சிக்காக வந்த அவர் 18 -ஆம் தேதி அங்கிருந்து ஓடி செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இது குறித்து 10 நாட்களுக்கு மேலாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள விவசாயிகளற்றில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதிகாரிகள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுபஸ்ரீ மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் கோவை ஈசா யோக மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மாயமானதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…