தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்!

திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அஜித் என்ற 26 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
திருவள்ளூரை சேர்ந்த 19 வயது பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அஜித் என்ற 26 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஷோல்வரம் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 19 வயதான அந்த பெண் தான் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாலையில் தனது அத்தை வீட்டிற்கு அருகிலுள்ள குதிரை பண்ணை என்ற இடத்திற்கு கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அஜித் என்ற 26 வயது இளைஞர் அந்த பெண்ணை தடுத்து, கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி அவரை தள்ளி விட்டதில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அந்த இளைஞரின் கையில் இருந்த கத்தியை பறித்துள்ளார்.
பின் அந்த கத்தியால், இளைஞரின் முகத்திலும், கழுத்திலும் குத்தியுள்ளார். அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிற நிலையில், அஜித் அந்த பெண்ணுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.