நிலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு தெறித்து ஓடிய பெண்.!
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி.
- தனது நிலத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து கண்மணி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவரின் நிலத்தின் நடுப்பகுதியில் பாறைகள் உள்ளது. அந்த பாறையில் நடுவே கடந்த 10 நாள்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலை பாம்பு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கண்மணி வழக்கம்போல நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து கண்மணி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறி உள்ளார்.
பின்னர் உறவினர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை ஒன்னகறை காட்டில் விட்டனர்.