கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில், சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால் பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும்.
இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், இவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து, நேற்று பிரசவ வலி ஏற்பட, புண்ணியவதி தனக்கு தானே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அவர் தொப்புள் கொடியை சரியாக அறுக்காமல் விட்டதால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, அவரது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வீட்டில் வைத்தே இறந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தாய் புண்ணியவதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…