குன்றத்தூர் வட்டாட்சியரான ஜெயசித்ரா கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலவரிடமிருந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக சக பணியாளர்களுக்கு அரசு அனுமதி இன்றி கறி விருந்து வைத்ததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பகுதியின் வட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஜெயசித்ரா முதலவரிடமிருந்து விருதை பெற்றார் . இதனை கொண்டாடும் விதமாக தாசில்தார் ஜெயசித்ரா குன்றத்தூர் பகுதியில் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து வைத்துள்ளார்.
தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பொது விழாக்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில் விதிகளை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்காக வட்டாட்சியர் ஜெயசித்ராவை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிற்ப்பு விருது பெற்ற ஜெயசித்ரா மக்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…