தாயை இழந்த பெண்., பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியது – முக ஸ்டாலின் ட்வீட்
திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை சேவூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. மக்களிடம் இருந்து புகார் சீட்டுகளை வாங்கி பெட்டியில் சேகரித்த, பின்னர் அதிலிருந்து ஒரு புகார் சீட்டை எடுத்து, புகார் அளித்த நபரை பேச வைத்தார். அப்போது, அம்மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் வீடு அருகில் உள்ள வீட்டில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது.
இதனால் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட வீட்டு சுவர் எங்கள் வீட்டின் மேல் விழுந்தது. மொத்தம் 5 பேர் அதில் ஒருவர் தன்னுடைய அம்மா இறந்துவிட்டார். இதன்பின் முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், எங்களுக்கு இதுவரை வரவில்லை, கலெக்டர் வரை மனு கொடுக்கப்பட்டது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வீடும் இல்லை, அம்மாவும் இல்லை. நானும் என் சகோதரர் ஒருவரும் நடுரோட்டில் தான் இருக்கிறோம்.
எங்களுக்கு அடுத்து என்ன செய்து என்று தெரியாமல் இருக்கு. இந்த மனுவை ஏற்று நீங்கள் உடனடியாக எதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஆறுதலை தெரிவித்த பின்னர் 100 நாள் திட்டத்தில் இந்த கோரிக்கையை வைக்கமாட்டேன். ஆட்சிக்கு வரும் வரை நான் காத்திருக்க மாட்டேன். அதற்கு முன்பே தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று அந்த பெண் கூறுகையில், முதல்வர் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி நேற்று இரவே என்னுடைய கணக்கில் வந்துவிட்டது. இதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். இதனை முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. திமுக-விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது. நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும் என்று வீடியோ பதிவுடன் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.
உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது.
திமுக-விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது!
நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும். pic.twitter.com/YVkAcwtSDd
— M.K.Stalin (@mkstalin) January 30, 2021