போதையில் பணியில் இருந்த காவலரை எட்டி உதைத்த பெண்!

Default Image

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகள் காரணமாக மதுபான கடையில் மது அருந்திவிட்டு பணியில் இருந்த காவலரை போதையில் எட்டி உதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவான்மியூர் பெசன்ட் நகர் ஈசிஆர் பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்தப்பகுதியில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அளவுக்கதிகமான போதையுடன் முறையற்ற நிலையில் கார் ஒன்றை ஓட்டி வருவதை அறிந்து காவலர்கள் அருகில் சென்றுள்ளனர். அவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் போதையில் இருந்ததால் தாறுமாறாக காவலர்களை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அவருடன் இருந்த நபருடன் சேர்ந்து இருவருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.அதன் பின் போதையில் இருந்த இளம்பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த காமினி எனவும் இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த ரோட்லோ ஸ்ரீபரசாத் என்பதும் தெரியவந்துள்ளது.

காமினி திரைப்படத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாக திட்டியுள்ளதுடன் தான் மீடியா துறையில் பணியாற்றுபவர் எனவும் அருகில் இருந்த காவலரை காலால் எட்டி உதைத்தும் போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த பதிவுகளை வைத்து தற்பொழுது காமினி மீது ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரில் மதுபோதையில் வந்த காமினி மற்றும் அவரது நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்